Skip to main content

அரசுப்படையினருக்கு சொந்தமான ராணுவ தளத்தை ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்!

Jan 17, 2021 255 views Posted By : YarlSri TV
Image

அரசுப்படையினருக்கு சொந்தமான ராணுவ தளத்தை ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்! 

வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் சாட், கமரூன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளது.



இங்கு போகோ ஹாரம், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருகிறது.



இதனால் அரசு படையினருக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் உள்ள அரசுப்படையினரின் ராணுவ தளத்தை குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் நேற்றிமுன்தினம் இரவு முதல் பயங்கர தாக்குதல் நடத்தினர்.



இரண்டு நாட்கள் நடந்த இந்த தாக்குதலில் அரசுப்படையினரின் ராணுவ தளத்தை ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். இந்த மோதலில் அரசுப்படையினர் மற்றும் பயங்கரவாதிகள் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான தகவல் தற்போதுவரை வெளியாகவில்லை.



பயங்கரவாதிகளிடம் இருந்து ராணுவ தளத்தை மீட்கும் முயற்சியில் நைஜீரிய படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.



ராணுவ தளத்தில் உள்ள ஆயுதங்களை பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு வருகின்றனர்


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை