Skip to main content

டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் என பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்!

Jan 14, 2021 240 views Posted By : YarlSri TV
Image

டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் என பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்! 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.



இதற்கிடையே கடந்த 6-ந் தேதி ஜோபைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.



இந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரத்துக்கு டிரம்ப் காரணம் என்றும் அவர் தனது ஆதரவாளர்களை தூண்டியதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.



இதையடுத்து அவரை அதிபர் பதவியில் இருந்து 25-வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி நீக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் முயற்சித்தனர். ஆனால், அதிபர் டிரம்பை 25-வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்ய மறுத்துவிட்டார்.



இதனால், ஜனநாயக கட்சியின் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபை மூலம் டொனால்டு டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்கெடுப்பு இன்று அதிகாலை நடைபெற உள்ளது.



அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் நடைமுறை தொடர்பாக வாக்க்டுப்பு நடைபெற உள்ள நிலையில் இது தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



அந்த வகையில், பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி பேசியதாவது:-



நாட்டுக்கு எதிராக அதிபர் டிரம்ப் வன்முறையை தூண்டிவிட்டுள்ளார். அவர் தனது பதவியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். நாம் விரும்பும் நமது அமெரிக்க நாட்டின் தற்போதைய ஆபத்து  டொனால்டு டிரம்ப் தான் என்றார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை