Skip to main content

தடுப்பூசிக்கு மோதி போட்ட நிபந்தனை - மாநிலங்களுக்கு வழங்கிய அறிவுரை!

Jan 12, 2021 227 views Posted By : YarlSri TV
Image

தடுப்பூசிக்கு மோதி போட்ட நிபந்தனை - மாநிலங்களுக்கு வழங்கிய அறிவுரை! 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதல் கட்டமாக 3 கோடி பேருக்கு போடப்படும் என்றும் அதற்கான செலவினத்தை மத்திய அரசே ஏற்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி வாயிலாக திங்கட்கிழமை பேசிய மோதி, "உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் ஜனவரி 16ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியாவின் பல நகரங்களில் இதற்கான ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது," என்று கூறினார்.



இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு வகை கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



இது குறித்து முதல்வர்களிடம் விளக்கிய மோதி, நெருக்கடி காலத்தில் எல்லோரும் ஒற்றுமையாக உழைத்தது, விரைவாக முடிவு எடுத்தது போன்றவைதான், பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவாமல் தடுக்க காரணமாக அமைந்தன என்று கூறினார்.



இரவு பகலாக மக்களுக்காக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உழைத்த முன் கள ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக வழங்கப்படும் என்று அவர் கூறினார்.



இவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று கோடியை எட்டும் என்றும் இவர்களுக்கு ஆகும் தடுப்பூசி செலவினத்தை மத்திய அரசே ஏற்கும். இதற்கு மாநில அரசுகள் பணம் செலுத்தத் தேவையில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.



இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டத்தின்போது, 50 வயதுக்கு மேல் அல்லது 50 வயதுக்கு கீழிருந்து கொரோனா அல்லது வேறு ஏதேனும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று பிரதமர் மோதி கூறினார்.



இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் தங்களுடைய வாய்ப்பு வரும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.



அப்போது பிரதமர் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் யோசனை கூறினார்.



கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கும் நிலையில், மக்களின் மனதில் இன்னும் பல சந்தேகங்கள் உள்ளன. அதை களையும் விதமாக முதல் நபராக பிரதமர் மோதி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் பிரதமர் வரலாறு படைக்க வேண்டும்," என்று மகாராஷ்டிரா அமைச்சர் கேட்டுக் கொண்டார்.



இதற்கிடையே, தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, அதன் தடுப்பூசியின் ஒரு டோஸ் மருந்தின் விலை இருநூறு ரூபாய் ஆகும் என்று கூறியுள்ளது.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை