Skip to main content

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 17 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Dec 22, 2020 260 views Posted By : YarlSri TV
Image

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 17 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! 

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமான 17இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக ஏழு கோடியே 72இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதுதவிர தற்போதுவரை ஐந்து கோடியே 41இலட்சத்துக்கும் மேற்பட்பட்டோர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.



உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.



இதற்கு அடுத்தப்படியாக கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக இந்தியா, பிரேஸில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.



இதனிடையே பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கொரோனா வைரஸ், தீவிரமாக பரவி வருகின்றது. இதனால் எதிர்வரும் தினங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை