Skip to main content

முகக் கவசம் இல்லாமல் செல்ஃபி எடுத்த சிலி ஜனாதிபதிக்கு அபராதம்!

Dec 21, 2020 210 views Posted By : YarlSri TV
Image

முகக் கவசம் இல்லாமல் செல்ஃபி எடுத்த சிலி ஜனாதிபதிக்கு அபராதம்! 

முகக் கவசம் இல்லாமல் செல்ஃபி எடுத்துக் கொண்டதற்காக, தென் அமெரிக்க நாடான சிலி நாட்டு ஜனாதிபதி செபாஸ்டியன் பினேராவுக்கு 3,500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



தென் அமெரிக்க நாடான சிலியில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம், சிறைத் தண்டனை ஆகியவை விதிக்க முடியும்.



இந்த நிலையில், தனது இல்லத்துக்கு அருகே உள்ள கடற்கரையில் சிலி ஜனாதிபதி, இளம்பெண்ணுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் பரவியது.



இதையடுத்து கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக செபாஸ்டியன் பினேராவுக்கு 3,500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



இந்தச் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரியுள்ள செபாஸ்டியன், தனது இல்லத்துக்கு அருகே உள்ள கடற்கரையில் படம் எடுத்துக்கொள்ள அந்தப் பெண் கோரியபோது, முகக் கவசத்தைக் கழற்றியது தவறு என்று ஒப்புக் கொண்டார்.



தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியதாக அவரை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், முகக் கவசம் இல்லாமல் பொது இடத்தில் படம் எடுத்துக் கொண்டது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை