Skip to main content

குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளுக்கு ஏதாவது குந்தகம் ஏற்பட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என ஹரியானா முதல்வர் தெரிவித்துள்ளார்!

Jan 01, 2021 299 views Posted By : YarlSri TV
Image

குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளுக்கு ஏதாவது குந்தகம் ஏற்பட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என ஹரியானா முதல்வர் தெரிவித்துள்ளார்! 

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் கடந்த ஒரு மாதங்ளுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு விவசாய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.



விவசாயிகளின் முக்கிய பயமே சட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்குமா? என்பதுதான். இந்த போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள்தான் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர்.



இந்த நிலையில்தான் ஹரியானா மாநிலத்தில் ஐந்து மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் மூன்றில் ஆளும் பா.ஜனதா ஆட்சி தோல்வியை சந்தித்தது.



இதற்கு இந்த விவசாயிகள் போராட்டம்தான் முக்கிய காரணம். இந்த நிலையில் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறுகையில் ‘‘ஹரியானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். குறைந்தபட்ச ஆதரவு விலை முடிவுக்கு கொண்டு வர யாராவது முயற்சி செய்தால் நான் அரசியலில் இருந்து விலகுவேன்’’ என்றார்.



துணை முதல்வரான துஷ்யந்தும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை