Skip to main content

இலங்கையில் நேற்றைய தினம் 549 புதிய நோயாளர்கள் அடையாளம்!

Dec 29, 2020 194 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் நேற்றைய தினம் 549 புதிய நோயாளர்கள் அடையாளம்! 

இலங்கையில் நேற்றைய தினம் 549 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 237 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது



அவர்களில் 237 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.



அதன்படி, தெமட்டகொடையில் 121 பேர், கிருலபனையில் 23 பேர் மற்றும் வெள்ளத்தையில் 18 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



இதேநேரம், கொழும்பைத் தவிர்த்து, கம்பஹா மாவட்டத்தில் 124 பேர், கண்டி மாவட்டத்தில் 44 பேர், களுத்துறை மாவட்டத்தில் 39 பேர், குருணாகல் மாவட்டத்தில் 20 பேர் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



மேலும் மாத்தறை மாவட்டத்தில் 07 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 06 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 02 பேர் மற்றும் கேகாலை மாவட்டத்தில் 02 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



மட்டக்களப்பு, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



இவர்களைத் தவிர்த்து வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 19 பேரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் அடங்குவதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.



இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 603 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



அவர்களில்,  33 ஆயிரத்து 221 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.



இதனையடுத்து, 8 ஆயிரத்து 188 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இதேவேளை, இந்த தொற்று காரணமாக மேலும் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 194ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை