Skip to main content

மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்!

Dec 14, 2020 280 views Posted By : YarlSri TV
Image

மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்! 

மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை மற்றும் திருச்சி மாட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். அப்போது, டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த 11 விவசாயிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, விவசாயிகள் வேளாண் திட்டத்திற்கு எதிராகவும், தமிழக அரசு இந்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



போராட்ட பகுதியில், தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜெயராமன் தலைமையில் ஏராளமான அதிரடி படையினர் கவச உடையில் குவிக்கப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, போராட்டத்திற்கு வரும் விவசாயிகளை தடுக்கும் விதமாக தஞ்சை நகருக்கு வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் ஏற்படுத்தி, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



திருச்சி மாவட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று துவங்கியது. இதனையொட்டி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கங்கள், மக்கள் அதிகாரம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முற்சித்தனர்.



அப்போது, திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட போலீசார், விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். மேலும், தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி வழங்கவும் மறுப்பு தெரிவித்தனர். இதனால் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைதுசெய்து அழைத்துசசென்றனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை