Skip to main content

இரு ஆண்டுகளில் சுங்கச் சாவடி இல்லாத இந்தியா – நிதின் கட்கரி!

Dec 19, 2020 251 views Posted By : YarlSri TV
Image

இரு ஆண்டுகளில் சுங்கச் சாவடி இல்லாத இந்தியா – நிதின் கட்கரி! 

ஜி.பி.எஸ். தொழில்நுட்ப அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் நடைமுறை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுங்கச் சாவடிகளே இல்லாத இந்தியா உருவாக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிதெரிவித்துள்ளார்.



டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை பங்கேற்ற அவர், நாடு முழுவதும் வாகனங்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் நடைமுறையை மத்திய அரசு இறுதி செய்துள்ளது என கூறினார்.



இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், வாகனங்களின் இயக்கத்தின் அடிப்படையில், அந்த வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து தானாக சுங்கக் கட்டணத்துக்கான தொகை எடுத்துக்கொள்ளப்படும்.



இந்த நடைமுறை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளே இல்லாத நிலை உருவாகு என சுட்டிக்காட்டினார்.



புதிதாக வரும் அனைத்து வணிக பயன்பாட்டுக்கான வாகனங்களிலும், வாகனம் இருக்குமிடத்தைக் கண்டறியும் (ஜிபிஎஸ்) தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளன.



அதுபோல, பழைய வணிக வாகனங்களிலும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பொருத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை