12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த காந்திய மக்கள் இயக்க மாவட்ட தலைவர் !
Dec 19, 2020 211 views Posted By : YarlSri TV
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த காந்திய மக்கள் இயக்க மாவட்ட தலைவர் !
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த காந்திய மக்கள் இயக்க மாவட்ட தலைவர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே ஆர்.என்.புதுாரை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் காந்திய மக்கள் இயக்க மாவட்ட தலைவராக உள்ளார். சொந்தமாக ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. அதாவது பெரியசாமியின் ஜெராக்ஸ் கடைக்கு வந்த சிறுமியிடம் ஆபாச படம் காண்பித்து அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
பவானி மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பெரியசாமியை தேடி வந்தனர். அத்துடன் ஆறு மாதங்களுக்கு பின், ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் அவர் சரணடைந்ததை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையில் பெரிய சாமியின் மீதான குற்றம் நிரூபணமானதாலும், அவர் மீது ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் இரு வழக்குகள், டவுன் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளதால், பெரியசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியை கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago