Skip to main content

இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஆ.ராசா எச்சரிக்கை!

Dec 09, 2020 266 views Posted By : YarlSri TV
Image

இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஆ.ராசா எச்சரிக்கை! 

2ஜி வழக்கு தொடர்பாக கோட்டையில் விவாதிக்க தயார் என கூறினேன். ஆனால் இன்றுவரை பதில் இல்லை என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.



அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2ஜி வழக்கில் குற்றச்சாட்டுகளை சிபிஐ நிரூபிக்கவில்லை என நீதிமன்றம் கூறியது.மிகவும் நேர்த்தியாக ஜோடிக்கப்பட்ட வழக்கு 2ஜி எனது நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு அப்படி இல்லை. மக்களாட்சி தத்துவத்தின் அடித்தளமாக அரசமைப்பு சட்டத்தின் மீது நடத்தப்பட்ட மன்னிக்க முடியாத படுகொலை என ஜெ.வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறியதற்கு எதிரான வகையில் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோர் செயல்பட்டதாக நீதிபதிகள் மனவேதனையுடன் கண்டனம் தெரிவித்தனர்.



2ஜி வழக்கில் வதந்தி, கிசுகிசு யூகம் என்பது தான் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் காங்கிரஸ் கையாலாகாத தனமாக 2ஜி வழக்கில் ஒதுங்கி கொண்டது. 2ஜி வழக்கு தொடர்பாக கோட்டையில் விவாதிக்க தயார் என கூறினேன்; ஆனால் இன்றுவரை பதில் இல்லை.2ஜி வழக்கு குறித்து விளக்கமளிக்கவும் விவாதிக்கவும் நான் தயார். 2ஜி வழக்கு தொடர்பாக முதல்வர் தனது தகுதியை மறந்து மிக மோசமாக விமர்சித்துள்ளார்.2ஜி பிரச்சனையில் தி.மு.க மீது மீண்டும் பொய் குற்றச்சாட்டை முதல்வர் கூறி வருகிறார். எல்லா அமைச்சர்கள் ஊழல் குறித்த விவரம் எங்களிடம் உள்ளது. அதை முன்னிறுத்தி வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். இதனால் முதல்வர் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.



அதிமுக மற்றும் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்களுடன் மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில் ஆ. ராசா விளக்கம் அளித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை