Skip to main content

கடுமையான அழிவை சந்தித்துள்ள நெடுந்தீவு!

Dec 07, 2020 250 views Posted By : YarlSri TV
Image

கடுமையான அழிவை சந்தித்துள்ள நெடுந்தீவு! 

கடுமையான அழிவை சந்தித்துள்ள நெடுந்தீவு!



அசாதாரண சூழ்நிலையால் படகுப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.தொடரும் மழை, மீனவ படகுகள் பல சேதம், கரையோரங்கள் கடுமையான அரிப்புக்கு உள்ளாகியுள்ளது.



மீனவர்களின் படகுகள் கரைகளில் உள்ள கற்பாறைகளுடன் மோதுண்டு  பல படகுகள் மிகக் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளது.படகுகளை பாதுகாப்பாக கட்டுவதற்கும் பாதுகாப்பு அணை வாண் இல்லாமை, இம் மீனவர்களது வாழ்வாதார முதலீடுகள் அழிக்கப்பட்டுள்ளது.



கடந்த புரவி சூறாவளியினால் நெடுந்தீவு J/1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும் 112 மீனவ குடும்பங்களின் படகுகள் , இயந்திரம், தெப்பம், வலை,களஞ்கட்டி என்பன அழிவடைந்து பல இலட்சம் அழிவைச் சந்தித்துள்ளனர்.



நெடுந்தீவு J/ 1 தொடக்கம் J/6 வரையான கிராம சேவகர் பிரிவுகளிலும், 829 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்கரையோரங்கள் பாரியளவில் சேதம் அடைந்து மீனவ குடும்பங்கள் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதாகவும்நெடுந்தீவு பிரதேச செயலர் F.C.சத்தியசோதி தெரிவித்தார்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை