Skip to main content

கிழக்கில் நேற்று புதன்கிழமை இரவு 8.18 வரை வெளிவந்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவு!

Dec 10, 2020 285 views Posted By : YarlSri TV
Image

கிழக்கில் நேற்று புதன்கிழமை இரவு 8.18 வரை வெளிவந்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவு! 

கிழக்கில்  நேற்று புதன்கிழமை இரவு 8.18 வரை வெளிவந்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து கிழக்கில் 473 ஆக தொற்றாளர் அதிகரித்துள்ளது.



அதேவேளை கல்முனை சுகாதார பிராந்தியத்தில் கீழ் உள்ள  அக்கரைக்கரைப்பற்று சந்தை ஊடாக 305 பேருக்கு தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா கொத்தனியையடுத்து. அக்கரைப்பற்று சந்தையில் இருந்து நேற்று புதன்கிழமை (9) இரவு 8.18 மணிக்கு கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் கொவிட்ட 19 நாளாந்தம் வெளியிடும் அறிக்கையின் பிரகாரம் 305 பேருக்கு தொற்று என கண்டறியப்பட்டுள்ளது.



கிழக்கு மாகாணத்தில்; 4 சுகாதார பிராந்தியங்களான மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 96 பேருக்கும், திருகோணமலை சுகாதார பிராந்தியத்தில் 18 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை சுகாதார பிராந்தியத்தில்  19 பேரும்; 340 பேருமாக 473 பேர் நேற்று  புதன்கிழமை (09) இரவு வரையில் கண்டறியப்பட்டுள்ளனர்.

நேற்று  புதன்கிழமை (09) இரவு 8.18 மணிவரையில் புதிதாக அக்கரைப்பற்றில் 6 பேரும். ஆலையடிவேம்பில் 3 பேரும்  காத்தான்குடியில் ஒருவரும், அம்பாறையில் ஒருவரும், உகணையில் 3 பேரும், அட்டாளைச்சேனையில் 2 பேர் உட்பட 16  பேர் கிழக்கில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.



 இந்த நிலையில் கிழக்கில் அக்கரைப்பற்று காவற்துறை பிரிவிலுள்ள அக்கரைப்பற்று. ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய 3 பிரதேச செயலகப்பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாளாந்தம் இடம்பெறும் பி சிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை