Skip to main content

இந்தியர்களுக்கான அமெரிக்கா விசா – முக்கிய தடைகள் நீக்கம்!

Dec 03, 2020 252 views Posted By : YarlSri TV
Image

இந்தியர்களுக்கான அமெரிக்கா விசா – முக்கிய தடைகள் நீக்கம்! 

அமெரிக்காவில் பல்வேறு வேலை வாய்ப்புகளில் இந்தியர்கள் பங்கு பெற்று வருகின்றன. மேலும் பலரும் பல்வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் H-1B விசாவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார். பெரும்பாலும் இந்த விசா நடைமுறையால் பயன்பெறுபவர்கள் இந்தியர்கள் மற்றும் சீனர்களே.



ட்ரம்பின் கட்டுப்பாடுகளால் இந்தியா மற்றும் சீனர்கள் அமெரிக்காவில் விசா பெறுவது மிகவும் சிக்கலாகி போனது. இந்த நிலையில் அமெரிக்கத் தேர்தல் வந்தது. அதனால், அமெரிக்கர்களுக்கு அதிகம் வேலை வாய்ப்பு கிடைத்தாகவும் சொல்லப்பட்டது. அதன்வழியே ட்ரம்ப் மீண்டும் அதிபராகும் வாய்ப்பை அது ஏற்படுத்தி தரும் என்றும் கூறப்பட்டது.



ஜனநாயக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் தான் தேர்தலில் வென்றால் H-1B விசா நடைமுறையை எளிமைப்படுத்துவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதனால், தேர்தலுக்கு முன் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் கருத்து கணிப்பு கேட்டபோது, பலரும் ஜோ பைடனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.



H-1B விசா வழியே வேலைக்கு அழைக்கப்படுபவர்களுக்கு மிக அதிகமாக சம்பளம் தர வேண்டும் என்ற நிலை இருந்தது. அதனால், அதிக சம்பளம் கொடுக்க விரும்பாத நிறுவனங்கள் அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்திக்கொண்டது. அதேபோல விசா பெறுவதில் உள்ள இன்னும் சில கடுமையான விதிமுறைகளையும் தளர்த்தியுள்ளது அமெரிக்க நீதிமன்றம்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை