ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 42ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
Dec 05, 2020 244 views Posted By : YarlSri TV
ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் 42ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 42ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 42ஆயிரத்து 176பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக 24இலட்சத்து 2ஆயிரத்து 949பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 27ஆயிரத்து 403பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 569பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நான்கு இலட்சத்து 72ஆயிரத்து 21பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதவிர ரஷ்யாவில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 18இலட்சத்து 88ஆயிரத்து 752பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1495 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago