Skip to main content

பாஜக – அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

Nov 21, 2020 228 views Posted By : YarlSri TV
Image

பாஜக – அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு! 

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார்.



இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்னை வந்த அமித்ஷாவை முதல்வர் , துணை முதல்வர் அமைச்சர்கள் வரவேற்றனர் . மாநில பாஜக தலைவர்எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்களும் வரவேற்றனர். குறிப்பாக தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



விமான நிலையத்திலிருந்து அமித்ஷா ஓட்டல் செல்லும் வழியில் பாஜக – அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபுறமும் உள்ள அதிமுக- பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் நடனமாடி வரவேற்றுள்ளனர். இதில் அதிமுகவினர் கட்சி கொடியுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.



கலைவாணர் அரங்கில் மாலை 4 மணிக்கு நடக்கும் விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார் விழாவில் 67 ஆயிரத்து 378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு காணொளி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை