Skip to main content

வட,கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகளை இன்னும் 24 மணிநேரத்தில் சூராவளி தாக்கும்!

Nov 23, 2020 223 views Posted By : YarlSri TV
Image

வட,கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகளை இன்னும் 24 மணிநேரத்தில் சூராவளி தாக்கும்! 

வட,கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகளை இன்னும் 24 மணிநேரத்தில் சூராவளி தாக்கும் என்று வழிமண்டல ஆராட்சி திணைக்கத்தின் யாழ்.பிராந்திய பொறுப்பதிகாரி பிரதீபன் எச்சரிக்கை செய்துள்ளார்.



சூராவளியால் ஏற்படவுள்ள காற்றின் வேகம், கடும் மழை, இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பொது மக்களும், கடற்றொழிலாளர்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.



தற்போது வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம், எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் தாழமுக்க வலையமாக மாற்றமடையும் சாத்தியமாக உள்ளது. இது 24 மணித்தியாலங்களில் சூராவளியாக மாற்றமடையக்கூடிய சாத்தியமும் உள்ளது.



இது தற்போது வடமேற்கு திசையாக நகர்ந்து, இலங்கையின் வடகிழக்கு கரையோகத்தை அண்மிக்கும் சாத்தியக்கூறு உள்ளது. இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் கடும் மழை, சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றல் மழையும் பெய்யக்கூடும்.



இதுமட்டுமல்லாமல் நாட்டின் எனைய பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும் காற்றானது சில பிரதேசங்களில் 60 தொடக்கம் 70 கிலோமீற்றல் வரையான வேகத்தில் வீசும்.

எனவே பொது இடி, மின்னல் தாக்கம் ஏற்படும் வேளைகளில் அத்தாக்கங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களை அறிவுறுத்துகின்றோம்.

தாழமுக்கம் காரணமாக புத்தளத்தில் இருந்து பொத்துவில், மட்டக்களப்பு, திருகோணமலை, காங்கேசன்துறை ஊடாக மன்னால் வரையா கடல் பரப்புக்களில் ஆங்காங்கே பலத்த மழை ஏற்படும். காற்றின் வேகமும் 70 தொடக்கம் 80 கிலேமீற்றல் வேகமாக அதிகரித்து காணப்படும்.



அவ்வாறான வேளைகளில் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். எனவே பொது மக்களும், கடற்றொழில் சார்பானவர்கள் மற்றும் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.



தற்போது திருகோணமலையில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் 6 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக மாற்றமடையும். 24 மணிநேரத்தில் சுராவழியாக மாறி வடமேற்காகா நகரவுள்ளது.

இதனால் ஏற்படவுள்ள கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை