Skip to main content

யாழ்ப்பாணம் - மயிலிட்டி கடற்பரப்பில் இன்று அதிகாலை வீசிய கடும் காற்று காரணமாக மீனவர் ஒருவருக்கு சொந்தமான ரோலர் படகு ஒன்று சேதமைடைந்துள்ளது!

Nov 15, 2020 291 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணம் - மயிலிட்டி கடற்பரப்பில் இன்று அதிகாலை வீசிய கடும் காற்று காரணமாக மீனவர் ஒருவருக்கு சொந்தமான ரோலர் படகு ஒன்று சேதமைடைந்துள்ளது! 

யாழ்ப்பாணம் - மயிலிட்டி கடற்பரப்பில் இன்று அதிகாலை வீசிய கடும் காற்று காரணமாக மீனவர் ஒருவருக்கு சொந்தமான ரோலர் படகு ஒன்று  சேதமைடைந்துள்ளது.



சுமார் 15 லட்சம் பெறுமதியான குறித்த படகு நீரில் மூழ்கியதில் இயந்திரம் மற்றும் படகின் சில பகுதிகள் சேதமாகியுள்ளது.



மயிலிட்டி துறைமுகத்தின்  கட்டுமான வேலைகளில் காணப்படும் குறைபாடு காரணமாகவே படகு சேதமடைந்துள்ளதாக மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்க தலைவரும், படகின் உரிமையாளருமான சுப்பிரமணியம் சியசிங்கம் தெரிவித்துள்ளார்.



சுமார் 30 வருடங்கள் நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் பின்பு குறித்த பகுதியில் மக்கள் மீள் குடியேறியதன் பின்பு, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் துறைமுகத்தின் கட்டுமாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்து.



கட்டுமானப்பணிகள் சீரான முறையில் நடைபெறாமையால் மீனவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்து.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை