Skip to main content

10 ஆண்டுகளில் முதல் முறையாக வெனிசூலா நாட்டுக்கு ஜேம்ஸ் ஸ்டோரி என்பவரை தூதராக அமெரிக்கா நியமனம் செய்துள்ளது!

Nov 20, 2020 323 views Posted By : YarlSri TV
Image

10 ஆண்டுகளில் முதல் முறையாக வெனிசூலா நாட்டுக்கு ஜேம்ஸ் ஸ்டோரி என்பவரை தூதராக அமெரிக்கா நியமனம் செய்துள்ளது! 

அமெரிக்காவுக்கும், வெனிசூலா நாட்டுக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் போக்கு நிலவி வருகிறது. வெனிசூலாவில் மறைந்த ஹியூகோ சாவேஸ் அதிபராக இருந்தபோதே இது தொடங்கி விட்டது.



வெனிசூலாவின் தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோவை போதைப்பொருள் பயங்கரவாதி என்று டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டி வந்தது. இரு நாடுகள் இடையே தூதரக உறவு இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 10 ஆண்டுகளில் முதல் முறையாக வெனிசூலா நாட்டுக்கு ஜேம்ஸ் ஸ்டோரி என்பவரை தூதராக அமெரிக்கா நியமனம் செய்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் நேற்றுமுன்தினம் நடந்த குரல் வாக்கெடுப்பில் ஜேம்ஸ் ஸ்டோரி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.



அமெரிக்காவில் ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்க இருப்பது, அமெரிக்கா, வெனிசூலா இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை