Skip to main content

குழந்தைகளின் கல்வி செலவிற்காக மாதந்தோறும் நிதியுதவி

Nov 08, 2020 230 views Posted By : YarlSri TV
Image

குழந்தைகளின் கல்வி செலவிற்காக மாதந்தோறும் நிதியுதவி 

குழந்தைகளின் கல்வி செலவிற்காக மாதந்தோறும் நிதியுதவி அளிக்கும் வகையில் புதிய திட்டத்தை மாநில அரசு அறிமுகம் செய்து வைத்துள்ளது.





Kerala Children




கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு நடைபெற்று வருகிறது. இது மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சிறைக் கைதிகளின் குழந்தைகள் படிப்பு செலவிற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் ரூ.15 லட்சம் அடிப்படை கல்விக்கும், ரூ.5 லட்சம் தொழிற்படிப்பிற்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள 3 மத்திய சிறைச்சாலைகள் உள்ளிட்ட 54 சிறைகளில் 6,000க்கும் மேற்பட்டகைதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.



இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சிறப்பான கல்வியை வழங்குவதே அரசின் நோக்கம். பெற்றோர்கள் அல்லது குடும்பத்தினர் சிறையில் இருக்கும் போது அவர்களின் பிள்ளைகளின் படிப்பு பாதியிலேயே நின்றுவிட அதிக வாய்ப்புள்ளது.



இத்தகைய சூழல் ஏற்படாத வகையில் தான் மாநில அரசு இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்த திட்டத்தின் மூலம் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு மாதம் ரூ.300, 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு மாதம் ரூ.500, உயர்கல்வி படிப்பவர்களுக்கு மாதம் ரூ.750, பட்டப்படிப்பு அல்லது தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.



சிறையில் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு படிப்புகளுக்கு வெவ்வேறான கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும்.



அந்த வகையில் கேரள அரசின் புதிய திட்டத்தில் ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குழந்தைகள் மேற்கூறிய சலுகைகளைப் பெற முடியும்.



Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை