Skip to main content

பெண் கவுன்சிலரை படிக்கட்டுகளில் தரதரவென்று இழுத்துச்செல்லும் பாஜக எம்.எல்.ஏ.வின் அத்துமீறல் வீடியோ!

Nov 12, 2020 250 views Posted By : YarlSri TV
Image

பெண் கவுன்சிலரை படிக்கட்டுகளில் தரதரவென்று இழுத்துச்செல்லும் பாஜக எம்.எல்.ஏ.வின் அத்துமீறல் வீடியோ! 

 



கர்நாடகாவில் மகாலிங்கபூரில் கடந்த 10ம் தேதி நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 23 பேர் உள்ள நிலையில் பாஜகவில் 13 உறுப்பினர்களும், காங்கிரசில் 10 உறுப்பினர்களும் இருந்தனர். இதில் பாஜகவை சேர்ந்த கவுன்சிலர்கள் கோதாவரி பாத், சாந்தினி நாயக் , சவிதா ஹுரகாட்லி ஆகிய மூவரும் இந்த தேர்தலில் போட்டியிட பாஜக மூத்த நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தும், அவர்கள் அதில் காதில் வாங்கவில்லை.



இதனால் ஆத்திரப்பட்ட மூன்று கவுன்சிலர்களும் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த தகவல் பாஜக நிர்வாகிகளுக்கு தெரியவந்ததால், அவர்கள் தேர்தல் நடக்கும் இடத்தில் குவிந்தனர். மூன்று பேரையும் வாக்களிக்க விடாமல் தடுத்துவிட வேண்டும் என்று வாசலிலேயே நின்றனர்.



சவிதா ஹுரகாட்லி தேர்தல் நடக்கும் இடத்திற்கு வந்தபோதே, சித்துசாவடி எம்.எல்.ஏ.(பாஜக) சவிதாவை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தார். ஆனால், சவிதா பிடிவாதமாக வாக்குச்சாவடிக்குள் நுழைந்தார். பின்னாலேயே ஓடிச்சென்ற எம்.எல்.ஏ., சவிதாவை பிடித்து இழுத்தார். அவர் வர மறுத்ததால் ஆவேசமாக பிடித்த இழுத்ததில் சவிதா பட்டிக்கட்டுகளில் தடுமாறி விழுந்தார். அப்படியும் விடாமல் அவரை தரதரவென்று இழுத்துச்சென்றார்



அங்கிருந்த போலீசார் ஓடிவந்து சவிதாவை மீட்க போராடினர். எம்.எல்.ஏ. பிடிவாதமாக பிடித்து இழுத்துக்கொண்டிருந்தார். ஆண் போலீசாரும் பெண் போலீசாரும் சேந்த எம்.எல்.ஏவின் பிடியில் இருந்து சவிதாவை விடுவித்து அவரை வாக்குச்சாவடிக்குள் அனுப்பு வைத்தனர்.



பதற்றத்தையும் இந்த சம்பவத்தை சில வீடியோவாக எடுத்து இணையங்களில் பதிவிட்டதால் அது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாஜக எம்.எல்.ஏவின் செயலுக்கு பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை