Skip to main content

கொரோனா தொற்று பல நாடுகளில் இரண்டாம் அலை வீசத் தொடங்கி விட்டது!

Nov 12, 2020 278 views Posted By : YarlSri TV
Image

கொரோனா தொற்று பல நாடுகளில் இரண்டாம் அலை வீசத் தொடங்கி விட்டது! 

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 24 லட்சத்து 67 40 ஆயிரத்து 865 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 12 லட்சத்து 89 ஆயிரத்து 747 பேர்.



கொரோனா தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப்படும் என உலகமே ஆவலாகக் காத்திருந்தது. அப்போது, உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவின் கேமாலியா நிறுவனம் தயாரித்து, அதை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவும் செய்துவிட்டது. இந்த மருந்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பப்படும் என்பதை அறிந்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், ஸ்புட்னிக் V எனும் பெயரிட்ட அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே போடச் சொன்னார்.



அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அம்மருந்து குறித்த சந்தேகங்கள் கிளப்பி வந்தது. ஆனால், புகழ்பெற்ற மருத்துவ இதழான லாசெண்ட், ஸ்புட்னிக் V பாதுக்காப்பானது என்று ஆய்வறிந்து கட்டுரை எழுதியது.



பல கட்ட ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. தற்போது ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பு மருந்து 92 சதவிகிதம் அளவுக்கு பலனித்து, கொரோனாவிலிருந்து காக்கும் என ரஷ்ய நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து 90 சதவிகிதப் பலன் அளிக்கிறது எனும் தகவல் வெளியானது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை