Skip to main content

பள்ளிகள் திறப்பது குறித்த கருத்து கேட்கும் கூட்டத்தில், 50% பெற்றோர் பள்ளிகளை திறக்க எதிர்ப்பு!

Nov 11, 2020 236 views Posted By : YarlSri TV
Image

பள்ளிகள் திறப்பது குறித்த கருத்து கேட்கும் கூட்டத்தில், 50% பெற்றோர் பள்ளிகளை திறக்க எதிர்ப்பு! 

பள்ளிகள் திறப்பது குறித்த கருத்து கேட்கும் கூட்டத்தில், 50% பெற்றோர் பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்ததாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.



கடந்த மார்ச் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர தமிழக அரசு அனுமதி அளித்தது. அவர்களுக்கு 16ம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும் என்றும் அறிவித்தது



ஏற்கனவே ஆந்திராவில் பள்ளிகளை திறந்ததால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இது பெற்றோர்கள் மத்தியில் பீதியை அதிகரிக்கச் செய்ததால், பள்ளிகளை திறக்க பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பள்ளிகளை திறப்பது குறித்து, தமிழக அரசு பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியது.



 கருத்து கேட்புக் கூட்டத்தில் 50%க்கு மேற்பட்ட பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என சொன்னதாகவும் பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசே இறுதி முடிவை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை