Skip to main content

அடம்பிடிக்கும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு மனைவி அறிவுரை..!

Nov 09, 2020 244 views Posted By : YarlSri TV
Image

அடம்பிடிக்கும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு மனைவி அறிவுரை..! 

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ள ட்ரம்ப் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், வெள்ளை மாளிகையை கைப்பற்றும் முயற்சிகளில் ஜோ பைடன் ஈடுபட்டுள்ளார்.



 





உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் டெமாக்ட்ரடிக் கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ளார். துணை அதிபராக சென்னையை சேர்ந்த இந்திய வம்சாவளியான டெமாக்ட்ரடிக் கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளார். பெரும்பான்மையைப் பெற 270 எலெக்டரல் வாக்குகளை பெறுவது போதுமானது என்ற நிலையில் ஜோ பைடன் 290 வாக்குகளைப் பெற்றுள்ளார். ட்ரம்ப் 214 வாக்குகளை பெற்றுள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்கவுள்ளனர். 1968ஆம் ஆண்டில் ரிச்சார்ட் நிக்சனுக்குப் பின்னர் துணை அதிபராக பதவியில் இல்லாத ஒருவர் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்

ட்ரம்புக்கு பலத்த அடி



முன்னதாக, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் ட்ரம்ப், ஜார்ஜியா நீதிமன்றத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து வழக்கு தொடர்ந்தார். ஆனால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல், மிக்சிகனில் ட்ரம்ப் தரப்பினர் தொடர்ந்த வழக்கும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 1990களுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் பதவியில் ஒரேயொரு முறை மட்டுமே வகிக்கக் கூடியவராக டொனால்ட் டிரம்ப் ஆகியிருக்கிறார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் பதவியில் இருந்த ஒரு அதிபர் போட்டியிட்டு தோல்வி கண்டுள்ளார்.





விரக்தியில் ட்ரம்ப்



தேர்தலில் வெற்றிபெறுவது எளிது; ஆனால் தோல்வியடைவது கடினம் என்று தெரிவித்துள்ள ட்ரம்ப், தேர்தலில் தோல்வியை தழுவும் நிலையை சாதாரணாமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதாலும், அவரது மனம் அதனை ஏற்க மறுப்பதாலும் விரக்தியின் உச்சிக்கே சென்றுள்ளார். தோல்வியை ஒப்புக்கொள்ள மீண்டும் மறுத்துள்ள ட்ரம்ப், தேர்தல் முடிவுகள் குறித்த சந்தேகங்களை சட்டரீதியாக எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உலக நாட்டு தலைவர்கள் அனைவருமே ஜோபைடன் வெற்றியை ஏற்றுக் கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டனர். ஆனாலும் கூட ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறார். டொனால்ட் ட்ரம்ப்பிடம் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும், விரைவில் வழக்குகள் தொடரப்படும் என்றும் அவரது வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர்.





அடம்பிடிக்கும் ட்ரம்ப்புகு அறிவுரை



அமெரிக்க தேர்தல் முடிவை ஏற்க பிடிவாதத்துடன் ட்ரம்ப் மறுப்பது அமெரிக்காவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருவதுடன், அமெரிக்கர்கள் மத்தியில் இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப், தனது தோல்வியை ஏற்றுக்கொண்டதும் ஜோ பைடன் வெற்றியை முறைப்படி அறிவிப்பார்கள் எனபதால், அந்நாட்டில் செயல்பட்டு வரும் சமூக அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரும் ட்ரம்ப் பிடிவாதம் பிடிக்காமல் அதிபர் மாளிகயை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தி வருகின்றனர். இதனிடையே, அவரது சொந்த குடும்பத்தில் இருந்தும் ட்ரம்ப்புக்கு அறுவுரைகள் சென்றுள்ளன. டிரம்ப்பின் பிடிவாதத்தை அமெரிக்க மக்கள் ஏற்க வில்லை. அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு அதிபர் மாளிகையில் இருந்து கவுரவமாக வெளியேற வேண்டும் என்று அவரது மருமகன் ஜேரட் குஷ்னர் மற்றும் ட்ரம்ப்பின் மனைவி மிலானியா ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.





வெள்ளை மாளிகையை கைபற்ற பைடன் ஆயத்தம்



இதுஒருபுறமிருக்க, வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை ஜோ பைடன் தொடங்கி உள்ளார். BuildBackBetter.com என்ற பக்கத்தை தொடங்கி நிர்வாகப் பணிகளை முதல் நாளில் இருந்தே தொடங்குமாறு தமது ஆதரவாளர்களுக்கு ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகிய இருவருமே அழைப்பு விடுத்துள்ளனர். கொரோனா, பொருளாதார மீட்பு, இன சமத்துவம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி மாதம் பதவி ஏற்பு விழா நடக்க இருந்தாலும் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. சட்டரீதியாக சில நடவடிக்கைகள் முதலில் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி விட்டன. அதேபோல், ஜோ பைடன் பதவி ஏற்பதற்கு முன்பாக வெள்ளை மாளிகையில் அவர் தங்குவதற்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் செய்யப்படும். அதற்கான வேலைகளும் தொடங்கியுள்ளன. பதவி ஏற்பு விழாவுக்கு யார் யாரை அழைப்பது என்பன உள்ளிட்ட அலுவல் ரீதியான திட்டங்களும் வகுக்கபட்டு வருகின்றன.




Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை