Skip to main content

கொரோணா தொடர்பான பயிற்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு இன்று நடாத்தப்பட்டுள்ளது!

Oct 30, 2020 208 views Posted By : YarlSri TV
Image

கொரோணா தொடர்பான பயிற்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு இன்று நடாத்தப்பட்டுள்ளது! 

கொரோணா நெருக்கடி அதிகரித்துள்ள இன்றைய காலச்சூழலில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களுக்கு   இன்றைய தினம் மீளவும் கொறோணா தொடர்பான பயிற்சி வகுப்பு வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி வே.கமலநாதன்  தலைமையில் தொற்றுநோய் தடுப்பு பிரிவினரால் நடாத்தப்பட்டது. 



இதில் கொரோணா நோயாளர்கள் அல்லது சந்தேகிக்கப்படும் கொறோணா தொற்றுள்ள நோயாளர்களை கையாளும் போது எவ்வாறான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் அணியவேண்டும், எவ்வாறு பாதுகாப்பாக கழற்ற வேண்டும் என்பது தொடர்பாகவும் மற்றும் PCR பரிசோதனைக்கான மாதிரிப்பொருட்கள் எவ்வாறு நோயாளியிடமிருந்து பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாகவும் செய்முறை ரீதியான பயிற்சி வழங்கப்பட்டது.



இப்பயிற்சி வகுப்பில் வைத்தியர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள் ஆகியோர் பங்குபற்றி பயனடைந்தனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை