Skip to main content

மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக கையெழுத்து!

Oct 28, 2020 241 views Posted By : YarlSri TV
Image

மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக கையெழுத்து! 

மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக கையெழுத்து இயக்கம் மற்றும் தேர்தல் செயல் வீரர்கள் கூட்டம் சுற்றுப்பயணமாக திண்டுக்கல் வந்தார் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத்.



திண்டுக்கல்லில் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது, இன்று நடைபெறும் பீகார் தேர்தலில் கண்டிப்பாக மக்கள் பாஜகவிற்கு தக்க பாடம் புகட்டுவர். தற்போதைய நிலையில் பீகார் சட்டசபை தேர்தலில் புதிய அலை உருவாகும் என்பது உறுதி. பாஜக அரசு பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான அரசாகவே உள்ளது. சமீப காலங்களில் அதிகரித்துள்ள பெண்கள் மீதான வன்முறையை கண்டிக்கும் விதமாக நவம்பர் 5-ம் தேதி பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான விரோத தினமாக முன்னெடுக்கப்படும்.



மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. வேளாண் திருத்தச் சட்டம் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களின் உழைப்பை பெரு முதலாளிகள் சுரண்டுவதற்கு வழிவகுக்கும். எப்போதுமே பாஜக அரசு பெரும் முதலாளிகளின் நலனை காப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அவர்களுக்கு அடித்தட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து அறிந்து தீர்ப்பதற்கான திட்டங்களில் ஆர்வம் கிடையாது.



முன்னதாக பணமதிப்பிழப்பு என்ற நடவடிக்கையின் மூலம் நாட்டின் அடிநாதமான கட்டமைப்பையே பாஜக தகர்த்தது‌ இதனால் சிறு குறு வணிகம் முற்றிலும் தகர்ந்த நிலையில் முறையற்ற ஜிஎஸ்டி சட்ட அமலாக்கதால் நாட்டின் ஜிடிபி அதலபாதாளத்தில் கிடக்கிறது.



வேளாண் திருத்தச் சட்டம் செயற்கை உணவு தட்டுப்பாட்டை உருவாக்கி கள்ளச் சந்தைகள் அதிகரிக்க வழிவகை செய்யும். உலகம் முழுவதும் எரிவாயு விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் எரிவாயு விலை நாளுக்கு நாள் விண்னை முட்டும் அளவிற்கு உயர்ந்தது வருகிறது. இதன் காரணமாகவே அனைத்து பொருட்களின் விலைகளும் ஏற்றம் காண்கிறது. இதனை தடுக்க மத்திய பாஜக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை’’என்று தெரிவித்தார்.



மேலும், தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக அரசு மத்திய பாஜக அரசின் கட்டளைக்கு தலையாட்டும் பொம்மையாகவே செயல்படுகிறது. தன்னை விவசாயி என முன்னிலைப் படுத்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்க்க திராணி இல்லாமல் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.



மத்திய மாநில அரசுகள் இரண்டுமே பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல் குற்றம் இழைத்தவர்களின் பக்கம் துணை நிற்கிறது என சாடினார்.



அப்போது அவரிடம் , பாஜகவுக்கு சென்ற நடிகை குஷ்பூ குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் கூறாமல் ஆவேசமாக பேசினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை