Skip to main content

முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் நேற்று 2 மணி நேரம் மவுனம் போராட்டம் நடத்தினர்!

Oct 20, 2020 279 views Posted By : YarlSri TV
Image

முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் நேற்று 2 மணி நேரம் மவுனம் போராட்டம் நடத்தினர்! 

பா.ஜ.க. பெண் வேட்பாளரை அயிட்டம் என்று கூறிய கமல் நாத்தை கண்டித்து, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் நேற்று 2 மணி நேரம் மவுனம் போராட்டம் நடத்தினர்.



மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல் நாத்துக்கு இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்து விட்டது போல் தெரிகிறது. கடந்த மார்ச் மாதத்தில் முதல்வர் பதவியை இழந்தார். தற்போது பெண் வேட்பாளர் குறித்து அசிங்கமாக பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் தப்ரா சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் இமார்டி தேவியை அயிட்டம் என்று மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்.



இது மத்திய பிரதேச அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கமல் நாத் மீது பா.ஜ.க.வின் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தற்காக கமல் நாத்தை கண்டித்து மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வினர் நேற்று 2 மணி நேரம் மவுன போராட்டம் நடத்தினர். போபாலில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க.வினர் காலை 10 மணி முதல் 12 மணி வரை மவுன போராட்டம் நடத்தினர். இதில் அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவும் கலந்து கொண்டார்.இந்தூரில் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் பா.ஜ.க.வினர் மவுன போராட்டம் நடத்தினர். அதில் அம்மாநில அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



பா.ஜ.க.வின் நடத்திய மவுன போராட்டம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இடைத்தேர்தலில் கமல் நாத்தின் சர்ச்சைக்குரிய கருத்து தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற பயத்தில் காங்கிரஸ் கட்சியினர் உள்ளனர். சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று முன்தினம் பேட்டி ஒன்றில், இது இமார்டி தேவிக்கு மட்டுமல்ல, மத்திய பிரதேச மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கும் ஒரு அவமானம், இவ்வளவு காலமாக காங்கிரசில் பணியாற்றிய ஒரு மகள் குறித்து கமல் நாத் ஆட்சேபகரமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார். திரவுபதி அவமதிக்கப்பட்டபோது மகாபாரதம் நடந்த நாடு இது. மக்கள் அதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அவரால் வெட்கக்கேடு என தெரிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை