Skip to main content

பேசிக்கொண்டிருந்தால் திமுக எதிர்கட்சியாக கூட வரமுடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்!

Oct 25, 2020 250 views Posted By : YarlSri TV
Image

பேசிக்கொண்டிருந்தால் திமுக எதிர்கட்சியாக கூட வரமுடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்! 

ஸ்டாலின் இதேபோல் பேசிக்கொண்டிருந்தால் திமுக எதிர்கட்சியாக கூட வரமுடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு விஜயதசமி மற்றும் ஆயுத பூஜையை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என்று ஸ்டாலினின் கூற்றிலிருந்து அவர் எல்லா பிரச்சினைகளிலும் அரசியல் தான் செய்கிறார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அரசியல் செய்வதற்கு எத்தனையோ வழிகள் உள்ளது. ஆனால் அரசின் நல திட்டங்களை குறை சொல்லுவது மட்டுமே ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது.



எதிர்க்கட்சி என்பது நாணயத்தின் இரு பக்கம் போல செயல்படும் வேண்டும் என்பது அண்ணாவின் கூற்று . எதிர்கட்சியின் உரிமை மற்றும் கடமையை அண்ணா தெளிவாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அண்ணாவின் வழி வந்தவர்கள் என்று கூறும் மு.க.ஸ்டாலின் அண்ணாவின் கொள்கைகளை எவ்வளவு தூரம் கடைப்பிடிப்பார் என்பது நமக்கு தெரியும். ஸ்டாலினைப் பற்றி மக்கள் எடை போடுவதற்கு அவர் இதுபோன்ற சில கருத்துகளை சொன்னால் போதும். இதேபோல் பேசிக்கொண்டிருந்தால் திமுக எதிர்கட்சிக்கு கூட லாயக்கில்லை என்று வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட மக்கள் வழங்க மாட்டார்கள். 2011 திமுக எதிர்கட்சியாக கூட வராத நிலையே 2021 ஆண்டும் தொடரும். எங்களுக்கும் ஆட்சிக்கு வர எளிதாக இருக்கும்” என்றார்


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

17 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

17 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

17 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

17 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

17 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

17 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை