Skip to main content

EH156Oஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகளில் 3 பேருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!

Oct 25, 2020 216 views Posted By : YarlSri TV
Image

EH156Oஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகளில் 3 பேருக்கு ஒரே நேரத்தில் திருமணம்! 

EH156O\ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகளில் 3 பேருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது



கேரளாவைச் சேர்ந்த பிரேம்குமார்-ரமாதேவி தம்பதி. இவர்களுக்குக் கடந்த 1995 ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர்களுக்கு உத்ரஜா, உதரா, உதாரா, உத்தமா மற்றும் உத்ராஜன் என பெயர் வைத்து மகிழ்ந்துள்ளனர் அந்த தம்பதி. காரணம் இவர்கள் உத்திர நட்சத்திரத்தில் பிறந்ததால் இவர்களுக்கு இப்படி பெயர் வைத்துள்ளனர்.



இதையடுத்து இவர்களின் ஒன்பதாவது வயதில் இவர்களின் தந்தை பிரேம்குமார் எதிர்பாராமல் இறந்து விட ஒட்டுமொத்த குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதன்பின்னர் ரமாதேவி 5 பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாகியுள்ளார்.



இதில் ஒரு பெண் ஆடை வடிவமைப்பாளராகவும், இரண்டுபேர் மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்களாகவும், ஒருவர் ஆன்லைன் எழுத்தாளராகவும் உள்ளனர். இதனால் ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த நான்கு பெண்களுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க அவரது தாய் முடிவு செய்துள்ளார். இதனால் ஏப்ரல் மாதம் 26ம் தேதி 4 சகோதரிகளுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா பேரிடர் காலமாக திருமணம் தள்ளிப்போனது.



இந்நிலையில் ஆடைவடிவமைப்பாளரான உத்ரா மஸ்கட்டில் ஓட்டல் மேனேஜராக பணிபுரிந்து வரும் அஜித்குமாரையும், ஆன்லைன் எழுத்தாளரான உத்தாரா வீடியோ பத்திரிகையாளர் கே.பி.மகேஷ்குமாரையும், மயக்கவியல் தொழில் நுட்ப வல்லுநராக உள்ள உத்தமா மஸ்கட்டில் கணக்காளராக உள்ள வினித்தை திருமணம் செய்து கொண்டனர். இதில் நான்காவது மகள் உத்ரஜாவுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் அவர் கொரோனா காரணமாக வெளிநாட்டில் மாட்டிக்கொண்டார். இதனால் அவர் நாடு திரும்பியதும் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குருவாயூர் கோயிலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இருப்பினும் இந்த திருமணம் நாடு முழுவதும் பேசும் பொருளாகியுள்ளது .


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை