Skip to main content

மாலத்தீவில் கட்டுமானப்பணி என்று கூறி தந்தை -மகன் இருவரும் ரூ.40 லட்சம் மோசடி!

Oct 24, 2020 208 views Posted By : YarlSri TV
Image

மாலத்தீவில் கட்டுமானப்பணி என்று கூறி தந்தை -மகன் இருவரும் ரூ.40 லட்சம் மோசடி! 

மாலத்தீவில் கட்டுமானப்பணி என்று கூறி தந்தை -மகன் இருவரும் ரூ.40 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஜீவா (58). புதிதாக வீடுகள் கட்டி விற்பனை செய்வது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமான பணிகள் போன்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.



கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த சஞ்சீவி(63) மற்றும் மகன் இமானுவேல்(32) ஆகிய இருவரும் சேர்ந்து ஜீவாவை அணுகியுள்ளனர். அப்போது மாலத்தீவில் ரூ. 200 கோடி மதிப்புள்ள ஒப்பந்த கட்டுமான பணிகள் வந்துள்ளது.அதை நாம் செய்தால் பெரிய அளவில் லாபம் பார்க்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.ஆனால் அதற்கு தேவையான முதலீடு தன்னிடம் இல்லையே ?என ஜீவா கேட்க, தந்தை -மகன் இருவரும் அதற்கும் கைவசம் ஒரு பதிலை வைத்திருந்துள்ளனர்.



அதாவது வெளிநாட்டில் தங்களது வேண்டியவர்கள் உள்ளார்கள்.அவர்கள் மூலம் ரூ.600கோடி வங்கியில் கடன்பெற்று வேலையை ஆரம்பித்து விடலாம். ஆனால் அதற்கு முன்பணமாக ரூ.40 லட்சம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர் . 600 கோடி முன் 40 லட்சம் சாதாரணம் தான் என்று எண்ணிய ஜீவா, பணத்தை கொடுத்துள்ளார். புகாரில் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தந்தை மற்றும் மகன் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் ஜீவாவிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை