Skip to main content

அரசியலமைப்பு என்பது சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப அது மாற்றியமைக்கப்படவேண்டும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்?

Oct 23, 2020 219 views Posted By : YarlSri TV
Image

அரசியலமைப்பு என்பது சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப அது மாற்றியமைக்கப்படவேண்டும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்? 

அரசியலமைப்பு என்பது சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப அது மாற்றியமைக்கப்படவேண்டும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.



தேர்தல் ஆணைக்குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவர் பக்கச்சார்பான முறையில் செயற்பட்டார். அவரிடம் சுயாதீனம் இருக்கவில்லை.



தேர்தலை நடத்தவேண்டிய இடத்தில் இருந்துக்கொண்டு தேர்தலுக்கு எதிராக நீதிமன்றம் சென்றார். இவ்வாறு 19 இல் பல குறைப்பாடுகள் உள்ளன. அச்சட்டம் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.



ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு இந்த நாட்டில் 42 வருடங்களாக அமுலில் உள்ளது. அரசியலமைப்பு என்பது கல்வெட்டு அல்ல, காலவோட்டத்துக்கேற்ப சமூகத்தின் வளர்ச்சிக்கேற்ப அது மாற்றியமைக்கப்படவேண்டும்.



அந்தவகையில் புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 9 பேரடங்கிய நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். அக்குழுவின் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. 6 மாதங்களுக்குள் வரைவு நகலை வழங்குவதாக குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.



எனவே, 20 என்பது தற்காலிக ஏற்பாடு, அதனை ஒத்திவைக்கமுடியாது. அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான ஆரம்பமாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். முழுமையானதொரு அரசியலமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

7 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை