Skip to main content

புலோலி- பருத்தித்துறை வீதி காப்பெற் வீதியாக புனரமைப்பு முழுமையுறும் தருவாயில்1

Oct 22, 2020 210 views Posted By : YarlSri TV
Image

புலோலி- பருத்தித்துறை வீதி காப்பெற் வீதியாக புனரமைப்பு முழுமையுறும் தருவாயில்1 

பல நெடுங்காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட கொடிகாமம் – புலோலி- பருத்தித்துறை வீதி தற்போது காப்பெற் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்டு முழுமையாக முடியும் தறுவாயில் உள்ளது.



தற்போது வரை மந்திகையிலிருந்து வரணி சுட்டிபுரம் கண்ணகை அம்மன் கோவில் வரை காப்பெற் போடப்பட்ட நிலையில் மிகுதி கொடிகாமம் வரை புனரமைப்புப் பணிகள் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றன.



இவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியில் இருக்க இன்னொரு புறம் விபத்துக்களும் அதிகரித்த வண்ணம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் அதிகம் விபத்தை சந்திக்கும் இடம் வரணியாகவே இருக்கிறது. இனியும் அவ்வாறே இருக்கப்போகிறது.



காப்பெற் போடப்பட்டதும் இதுவரை வரணிப்பகுதியில் மூன்று விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒரு உயிரிழப்பும் ஏற்பட்டிருந்தது.



அண்மையில் இன்னும் இரண்டு விபத்துக்கள் வரணிப்பகுதியில் இடம்பெற்றிருந்தன. இதில் எவருக்கும் பெரும் காயங்களோ இழப்புக்களோ ஏற்படவில்லை.



இவ்வாறு விபத்து இடம்பெறுகின்றமைக்கு காரணம், வாகனங்களின் வேகக்கட்டுப்பாடற்ற ஓட்டம். தற்போது காப்பெற்றில் பயணிக்கும் வாகனங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் செல்கின்றன. இது தொடருமாக இருந்தால் இன்னும் பல விபத்துக்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.



ஆகவே கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் வாகனம் செலுத்தும் சாரதிகள் வேகக்கட்டுப்பாட்டுடன் வாகனங்களை செலுத்துவதன் மூலம் பல விபத்துக்களை தவிர்க்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை