Skip to main content

ஏமன் நாட்டில் பிணைக்கைதிகளாக இருந்த அமெரிக்காவை சேர்ந்த இருவரையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் விடுதலை செய்தனர்!

Oct 17, 2020 284 views Posted By : YarlSri TV
Image

ஏமன் நாட்டில் பிணைக்கைதிகளாக இருந்த அமெரிக்காவை சேர்ந்த இருவரையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் விடுதலை செய்தனர்! 

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையினருக்கும் இடையே 2014-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7-வது ஆண்டாக நீடிக்கிறது.



இதற்கிடையே அமெரிக்காவை சேர்ந்த மனித நேய பணியாளர் சாண்ட்ரா லோலியை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்து 3 ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருந்தனர். இதேபோன்று அமெரிக்க தொழில் அதிபர் மைக்கேல் கிடாடாவையும் ஒரு வருடத்துக்கு மேலாக தங்கள் பிடியில் பிணைக்கைதியாக வைத்திருந்தனர்.



இப்போது அவர்கள் இருவரையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் விடுதலை செய்து விட்டனர். இதை அமெரிக்க அரசு அதிகாரிகள் உறுதி செய்தனர்.



மேலும், அங்கு கொல்லப்பட்ட அமெரிக்க பிணைக்கைதியான பிலால் பதீனின் உடலையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர்.



ஓமனில் மருத்துவ சிகிச்சைக்காக சென்று, தவித்து வந்த 200-க்கும் மேற்பட்ட ஏமன் நாட்டினர் விடுவிக்கப்பட்டு, திரும்ப அனுப்பப்பட்டதை தொடர்ந்து இந்த விடுதலை நடவடிக்கையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எடுத்து இருக்கிறார்கள் என தகவல்கள் கூறுகின்றன.



அமெரிக்க பிணைக்கைதிகள் 2 பேர் விடுவிக்கப்பட்டிருப்பதை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை வரவேற்றுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

8 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை