Skip to main content

காரைநகரில் நெல் விதைப்பு ஆரம்பம் கால்நடைகளை கட்டி வளர்க்கவேண்டும்!

Oct 16, 2020 234 views Posted By : YarlSri TV
Image

காரைநகரில் நெல் விதைப்பு ஆரம்பம் கால்நடைகளை கட்டி வளர்க்கவேண்டும்! 

காரைநகர் பிரதேசத்தில் வயலில் நெல் விதைப்பு நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் கால்நடைகளை கட்டி வளர்க்குமாறு காரைநகர் கமநல சேவைகள் நிலையமும் கமக்காரர் அமைப்புக்களும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.



விவசாயிகள் கடந்த முதலாம் திகதி தொடக்கம் நெல் விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காரைநகரில் கால்நடை வளர்ப்போர் தமது கால்நடைகளை 2020 ஒக்ரோபர் முதலாம் திகதியில் இருந்து 2021 யூன் 30 ஆம் திகதி வரை கட்டி வளர்க்கவேண்டுமம் எனவும் கால்நடைகளுக்கு இதுவரை காதடையாளம் இடாதவர்கள் உடனடியாக இட்டுக்கொள்ளுமாறும் கமக்காரர் அமைப்புக்களின் காலபோக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



மேலும், வயலில் கால்நடைகள் பிடிக்கப்பட்டால் அதன் உரிமையாளர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், காதடையாளம் இடப்படாத கால்நடைகள் பிடிக்கப்பட்டால் அரசுடமையாக்கப்படும், விதைக்கப்பட்ட வயலில் இருந்து 100 மீற்றர் தூரத்திற்குள் கட்டப்படும் கால்நடை விவசாயிகளால் பிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் எனவும் மேற்படி காலபோக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை