Skip to main content

மன்னாரின் பல பாகங்களிலும் இன்று (13) காலை 7.30 மணி முதல் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது!

Oct 13, 2020 248 views Posted By : YarlSri TV
Image

மன்னாரின் பல பாகங்களிலும் இன்று (13) காலை 7.30 மணி முதல் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது! 

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக இரண்டு கிராமங்கள் மூடப்பட்ட நிலையில் நேற்று (12) மாலை 6.30 மணியளவில் மீண்டும் குறித்த கிராமங்கள் திறந்து விடப்பட்டது.



இந்த நிலையில் மன்னாரின் பல பாகங்களிலும் இன்று (13) காலை 7.30 மணி முதல் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



மன்னார் காவற்துறையினர், விசேட அதிரடிப்படையினர், பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மன்னார் நகர சபை ஆகியவை இணைந்து கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.



இதன்போது மன்னார் பெரியகடை பகுதியில் மூடப்பட்ட வர்த்தக நிலையம், அதனை சார்ந்த பகதிகள், மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடம் மற்றும் பட்டித்தோட்டம் ஆகிய பகுதிகளில் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.



மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் பந்துல வீரசிங்க, மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன், மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கில்றோய் பீரிஸ் உற்பட விசேட அதிரடிப் படை அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை