Skip to main content

முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரையும் திரைப்பிரபலங்கள் பலரும் சந்தித்து வருகின்றனர்!

Oct 12, 2020 251 views Posted By : YarlSri TV
Image

முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரையும் திரைப்பிரபலங்கள் பலரும் சந்தித்து வருகின்றனர்! 

அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரையும் திரைப்பிரபலங்கள் பலரும் சந்தித்து வருகின்றனர்.



அந்த வகையில் நடிகை விந்தியா துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். முன்னதாக முதல்வர் பழனிசாமியை சந்தித்த அவர் அதிமுக முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து கூறினார்.



நடிகை விந்தியா ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போதே அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். ஆரம்பத்தில் நட்சத்திர பேச்சாளராக இருந்த அவர் தற்போது அதிமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளராக உள்ளார்.



கடந்த 7 ஆம் தேதியன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் பெண்களுக்கு எந்தவிதமான அவமரியாதையும் இருக்காது. இங்கு எல்லோரும் நன்றாக இருக்கிறோம். பெண்களுக்கு மரியாதை கொடுக்கப்படும் ஒரே கட்சி அதிமுக என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை