Skip to main content

நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை – அப்பல்லோ மருத்துவமனை சாதனை!

Oct 08, 2020 226 views Posted By : YarlSri TV
Image

நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை – அப்பல்லோ மருத்துவமனை சாதனை! 

கொரோனா தொற்று காலத்திலும் அப்பல்லோ மருத்துவமனை இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்துள்ளது.



இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி கூறுகையில், நாடு முழுவதும் கொரோனா அச்சம் நீடித்த நிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளோம் என கூறினார்.



நுரையீரல் அறுவை சிகிச்சை நோயாளிக்கு, மாற்று நுரையீரல் கிடைக்கும் வரை எக்மோ எனப்படும் சிகிச்சையில் 45 நாட்கள் இருந்தார். நுரையீரல் அறுவை சிகிச்சை நோயாளி, நாட்டிலேயே முதல் முறையாக 45 நாட்கள் எக்மோ கருவி உதவியுடன் இருந்தது இதுதான் முதல் முறை என்றும் ரெட்டி குறிப்பிட்டார். அந்த நோயாளிக்கு ஜூன் மாத இறுதியில், இரட்டை நுரையீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, ஆகஸ்ட் 27 ஆம் தேதி பூரண நலம் பெற்று வீடு திரும்பியதாகவும் பிரதாப் ரெட்டி கூறினார்.



அப்பல்லோ மருத்துவமனையின் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி கூறுகையில், அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள், அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொடர்ந்து அந்த சிகிச்சையை மேற்கொண்டதாக குறிப்பிட்டார். கொரோனா தொற்று காலத்தில்கூட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையை இதன் மூலம் உருவாக்கியுள்ளோம் எனவும் குறிப்பிட்டார். அரசு வழிகாட்டிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது என்றும் ப்ரீத்தா தெரிவித்தார்.



நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டி கூறுகையில், உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு வளர்ந்து வரும் அதே நேரத்தில், உறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மேம்படுத்தும் வழிகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து வருவதாக தெரிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை