Skip to main content

ஈரான் நாட்டில் ஒரே நாளில் 251 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 28 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது!

Oct 12, 2020 273 views Posted By : YarlSri TV
Image

ஈரான் நாட்டில் ஒரே நாளில் 251 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 28 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது! 

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் 210க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.



 இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.



சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.



உலகளாவிய அளவில் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 3.75 கோடியைக் கடந்துள்ளது. 



10.80 லட்சத்துக்கும் அதிகமான மக்களை இந்த கொடிய ஆட்கொல்லி வைரஸ் கொன்று குவித்துள்ளது.



உலக அளவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் பட்டியலில் ஈரான் 13வது இடத்தில் உள்ளது.



இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் ஈரான் நாட்டில் ஒரே நாளில் 251 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 28 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது.



ஈரானில் மேலும் 3,822 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.



கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த 251 பேர் உயிரிழந்துள்ளதால், அங்கு பலி எண்ணிக்கை 28544 ஆக உயர்ந்துள்ளது என ஈரான் அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை