Skip to main content

அரிசியின் விலையை அதிகரிக்க முற்படுவார்களாயின், அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - பந்துல குணவர்தன

Oct 11, 2020 239 views Posted By : YarlSri TV
Image

அரிசியின் விலையை அதிகரிக்க முற்படுவார்களாயின், அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - பந்துல குணவர்தன  

மொத்த வியாபாரிகள் அரிசி பற்றாக்குறையை ஏற்படுத்தி, அரிசியின் விலையை அதிகரிக்க முற்படுவார்களாயின், அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.



மரதகஹமுல பகுதியில் அமைந்துள்ள நெற் களஞ்சியசாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



அத்துடன், இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை அனுமதியைப் பெறப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



இந்த, இறக்குமதி நடவடிக்கைக்காக 2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



மேலும், நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது என்ற அரசாங்கத்தின் கொள்கையை மீறி அரிசி மோசடியில் ஈடுபடுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை