Skip to main content

கிளிநொச்சியில் புலமை பரிசில் பரீட்சைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகின்றது!

Oct 11, 2020 270 views Posted By : YarlSri TV
Image

கிளிநொச்சியில் புலமை பரிசில் பரீட்சைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகின்றது! 

கிளிநொச்சியில் புலமை பரிசில் பரீட்சைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் புலமைபரிசில் பரீட்சையில் 2555 மாணவர்கள் தோற்றுகின்றனர். 39 பரீட்சை நிலையங்களில் தற்போது காணப்படும் கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகின்றது. 



விசேட கண்காணிப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இவ்வருட புலமை பரிசில் பரீட்சையில் மாணவர்கள் தோற்றியுள்ளதாக கிளிநொச்சி வலய கல்வி பணிமனை தகவல் வழங்கியுள்ளது. எனினும் 2555 மாணவர்களில் எத்தனை பேர் சமூகமளித்தனர் என்பது தொடர்பான தகவல்கள் இன்று மாலையே கிடைக்கும் எனவும் கிளிநொச்சி வலய கல்விப்பணிமனை தெரிவித்துள்ளது.



இதேவேளை கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 7 மாணவர்கள் இன்று புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். அவர்களிற்கான சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளதுடன், பரீட்சை எழுதுவதற்கான விசேட ஏற்பாடுகளும் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.



 



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை