Skip to main content

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று பரவுவதால் பல்வேறு இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன!

Oct 11, 2020 276 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று பரவுவதால் பல்வேறு இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன! 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 3.50 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.



உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் அதிகரித்து வருகிறது. இலங்கையில் இதுவரை 4,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 13 பேர் உயிரிழந்த நிலையில், 3,306 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 



இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருவது அந்நாட்டு மக்களை கலக்கம் அடையச் செய்துள்ளது. 



 



2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இலங்கை அரசு தனிமைப்படுத்தி உள்ளது. தற்போது தொற்று பாதிப்புக்கு உள்ளான பெரும்பாலானவர்களில், கடந்த வாரம் தொற்று பாதித்தவருடன் தொடர்பு இருந்தவர்கள் என இலங்கை சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 



 



தொற்று பரவலால்  கம்பஹா பிராந்தியம் மற்றும் களனி பிராந்தியம் மற்றும் சீதுவ  போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மறு அறிவிப்பு வரும் வரை கலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை