Skip to main content

தங்கப்பாண்டியன் மனைவி மறைவு : அழகிரி, ரவீந்திர நாத், உதயநிதி நேரில் அஞ்சலி!

Oct 05, 2020 296 views Posted By : YarlSri TV
Image

தங்கப்பாண்டியன் மனைவி மறைவு : அழகிரி, ரவீந்திர நாத், உதயநிதி நேரில் அஞ்சலி! 

மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் மனைவி ராஜாமணி உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.



மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மனைவி ராஜாமணி உடல்நல குறைவால் காலமானார். இவர் திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு, மக்களவை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் தாயார் ஆவார். இவரது மறைவிற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் மறைந்த ராஜாமணி அம்மாள் உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அத்துடன் அவர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆறுதல் கூறினார்.



இதேபோல் அழகிரி கருணாநிதி, துணை முதல்வர் ஓபிஎஸ் மகனும் மக்களவை எம்.பியுமான ரவீந்திரநாத் ஆகியோர் நேரில் மரியாதை செலுத்தினர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை