Skip to main content

தேர்தல் நேரத்தில் பாஜக திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்

Oct 07, 2020 307 views Posted By : YarlSri TV
Image

தேர்தல் நேரத்தில் பாஜக திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம் - பொன்.ராதாகிருஷ்ணன் 

தேர்தல் நேரத்தில் பாஜக திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.



தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் கட்சியான அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் பிரச்னை இன்று முடிவுக்கு வந்தது. அதனால் இனி தேர்தலுக்கான கூட்டணி அமைக்கும் பணியில் அதிமுக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



அண்மைக்காலமாக விநாயகர் சிலை, இ-பாஸ் உள்ளிட்ட விவகாரங்களால் பாஜக – அதிமுக கூட்டணியில் பிரச்னை நீடிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் பாஜக-அதிமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை, கூட்டணி தொடரும் என முதல்வர் பழனிசாமியும் பாஜக தலைவர் எல்.முருகனும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் நேரத்தில் திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.



அதாவது, தற்போது இருப்பது நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி என்றும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி இனிமேல் தான் அமைக்கப்படும் என்றும் எதிர்காலத்தில் திமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமையலாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தேர்தல் நெருங்க கூட்டணிகள் மாற வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை