Skip to main content

புகார்களை, மக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று விசாரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

Oct 07, 2020 242 views Posted By : YarlSri TV
Image

புகார்களை, மக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று விசாரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! 

புகார்களை, மக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று விசாரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



தொற்று பரவுவதை தடுக்கவும், புகார் அளிக்க வருபவர்களின் நலன் கருதியும், பொதுமக்களின் புகார்களை நேரில் சென்று விசாரணை செய்ய வேண்டுமென நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவிட்டார்.



இதையடுத்து அனைத்து காவல் நிலையங்களில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பேரில் புகார் மனு அளிப்பவர்களின் வீடுகளுக்கே காவலர்கள் நேரடியாக சென்று விசாரணை நடத்தி புகார் பெற்று வருகின்றனர்.



இதற்கான வாட்ஸ் அப் எண்களும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என புகார்களின் தன்மைக்கு ஏற்ப காவல்துறையினர் நேரடியாக சென்று விசாரணை நடத்துகின்றனர். இந்த நடைமுறைக்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை