Skip to main content

ஜோ பைடனும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது!

Oct 03, 2020 264 views Posted By : YarlSri TV
Image

ஜோ பைடனும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது! 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த புதன்கிழமை (30.9.2020) நடந்த பிரசார பேரணியின்போது அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் சென்றிருந்தார்.



இதனால், நேற்று டொனால்டு டிரம்பும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், அதே புதன்கிழமை தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனுடன் அதிபர் டொனால்டு டிரம்ப் நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார்.



விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற சில நாட்களில் அதிபர் டொனாலடு டிரம்பிற்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஜோ பைடனுக்கும் கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.



இதானால் ஜோ பைடன் அவரது மனைவி ஜில் பைடனுடன் இணைந்து இன்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அந்த பரிசோதனையில் ஜோ பைடம் மற்றும் அவரது ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று பரவவில்லை என்பது தெரியவந்துள்ளது.



இது தொடர்பாக 77 வயது நிரம்பிய ஜோ பைடன் தான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எனக்கும் (ஜோ பைடன்) எனது மனைவிக்கும் (ஜில் பைடன்) கொரோனா பரவவில்லை என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை தொடர்ந்து துய்மையாக வைத்திருத்தல் ஆகியவற்றை இவை (டொனால்டு டிரம்பிற்கு கொரோனா உறுதியானது) நமக்கு நினைவு கூர்ந்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை