Skip to main content

அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் -சிவாஜிலிங்கம்

Sep 29, 2020 248 views Posted By : YarlSri TV
Image

அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் -சிவாஜிலிங்கம் 

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற  அடக்குமுறைகளுக்கு எதிராக  தமிழ் தேசியக் கட்சிகள்  தொடர்ச்சியாக ஒற்றுமையுடன்  பயணிக்கவேண்டிய தேவையை நாங்கள் உணர்கின்றோம் எனத் தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் நாங்கள் ஒற்றுமையாக பயணிப்போம் என்பதை உரிமையுடன் கூறிக் கொள்கிறோம் எனத் தெரிவித்தார் 



ஐனநாயக அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு மக்களின் ஒற்றுமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 



தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்களை  அதேபோல் பொது மக்களை நினைவு கூறுவதற்கு குறிப்பாக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கும் பல நெருக்கடிகளையும் அதேபோல தியாகி திலீபனின் நினைவேந்தல் செய்வதற்கு நீதி மன்றின் ஊடான தடைகளையும் பல நெருக்கடிகளையும் விதித்திருந்தது.



இந்த தடைகளுக்கு எதிராக பத்து தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றாகக்கூடி இலங்கையின் ஜனாதிபதிக்கும் மற்றும் பிரதமருக்கும் வேண்டுகோளை சமர்ப்பித்திருந்தது. 



இந்தத் தடைகளை விதிப்பது தவறு இனிமேல் இவ்வாறான தடைகளை ஏற்படுத்தவேண்டாம் சர்வதேச சட்டங்களின் படியும் மனித உரிமை விதிகளின் படியும் இறந்தவர்களை அஞ்சலிக்கும் உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தி இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தோம் அது மட்டுமன்றி இதற்கான அனுமதி வழங்காது விட்டால் நாங்கள் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை செய்யவேண்டி இருக்கும் என்பதை தெரிவித்திருந்ததோம். 



இந்த அடிப்படையில் அவர்கள் அதனை செவி சாய்க்காத நிலையில் கடந்த 26 ஆம் திகதி 28 ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தோம்.



 கடந்த 26 ஆம் திகதி பல தடைகள் அழுத்தங்களுக்கு மத்தியில் உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம் 28 ஆம் திகதி நேற்று ஹர்த்தாலையும் வெற்றிகரமாக செய்துள்ளோம்.



 இதன் மூலம்   எந்தத் தடை போட்டாலும் கிளித்தட்டு விளையாட்டு மற்றும் தவளைப்பாய்ச்சல் போல் திடீரென சில விடையங்களை நாங்கள்  செய்துள்ளோம்.அரசாங்கம் எந்த தடை போட்டாலும் சில விடயங்களை செய்துள்ளோம் இதன் மூலம் 



இன்று மக்கள் எதிர்பார்க்கின்ற விடையம் நாங்கள் கோரிக்கை விடுத்தபோது இதற்கான ஒத்தழைப்பை வழங்கியுள்ளார்கள் இதற்கான  காரணம் இந்த ஒற்றுமையை ,ஒன்றிணைவை மக்கள் நேசிக்கின்றார்கள் ,இதனை விரும்புகின்றார்கள். இது முடிந்து விட்டது என நினைத்து ஆளுக்காள் பிரிந்து செல்வது மக்களின் விருப்பிற்கு மாறான செயலாகும். 



தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தமிழ்  கட்சிகள் பொதுவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றன. 



ஒரு சில கட்சிகள் தவறாக நடக்க முற்பட்டால் கூட அவர்களால் இதனை மீறிச் செல்லமுடியாத நிலை இருக்கின்றது. தேர்தல் காலங்களிலும் கூட ஒற்றமை நிலைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். 



தேர்தல் காலத்தில் ஒற்றுமைப்படாதபோதும் தமிழ் மக்களுக்கு எதிராக கிளம்பும் அடக்குமுறைகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ச்சியாக பயணிக்க வேண்டிய தேவையை நாங்கள் உணர்கின்றோம். நாங்கள் அதை சாதிப்போம் என்பதை மக்களுக்கு உரிமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என்றார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை