Skip to main content

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான Virtual Summit இருதரப்பு மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை இணையவழி ஊடாக இடம்பெறவுள்ளது!

Sep 23, 2020 273 views Posted By : YarlSri TV
Image

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான Virtual Summit இருதரப்பு மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை இணையவழி ஊடாக இடம்பெறவுள்ளது! 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான Virtual Summit இருதரப்பு மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை இணையவழி ஊடாக இடம்பெறவுள்ளது.



இதுதொடர்பாக வெளி நாட்டு அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில்¸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இந்தியப் பிரதமருடன் தொலைபேசி ஊடாக உரையாடியபோது, இந்த மாநாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.



சனிக்கிழமை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம், நிதி அபிவிருத்தி, பாதுகாப்பு, கல்வி, சுற்றுலாத்துறை, கலாசாரம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்படவிருக்கின்றன.



பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் தொடர்பிலும் இதன் போது பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த மாநாட்டில் இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை