Skip to main content

தனுறொக்கி வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனு மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது!

Sep 26, 2020 242 views Posted By : YarlSri TV
Image

தனுறொக்கி வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனு மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது! 

தனுறொக்கி வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனு மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாள்வெட்டில், படுகாயமடைந்த தனு யாழ்;. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



காரில் வந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த தனுவை யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் வைத்து இன்று நண்பகல் வழிமறித்து துரத்தி துரத்தி, அருகில் இருந்த தனியார் கல்வி நிலையத்தில் வைத்து வெட்டியுள்ளனர்.



வாள்வெட்டுக்கு இலக்கான தனு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், சம்பவ இடத்தில் கார் மற்றும் வாள்கள், மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.



காரில் வைத்தியர் என்ற ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த கார் வைத்தியரின் அல்ல என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை