Skip to main content

ஐசிஎப் தொழிற்சாலையில் தீ விபத்து: தீயை அணைக்க 12 தீயணைப்பு வாகனங்கள் வரவழைப்பு!!!

Sep 26, 2020 249 views Posted By : YarlSri TV
Image

ஐசிஎப் தொழிற்சாலையில் தீ விபத்து: தீயை அணைக்க 12 தீயணைப்பு வாகனங்கள் வரவழைப்பு!!! 

சென்னை வில்லிவாக்கம் அடுத்த நியூ ஆவடி சாலையில் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. ஆலையில் உள்ள 54வது சேமிப்பு குடோனில் அதிகாலை 3 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வில்லிவாக்கம், அண்ணாநகர், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 12 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஆலையில் பற்றிய தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நிகழ்ந்த இடத்தில் தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் பார்வையிட்டார். இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ரயில் பெட்டி உதிரி பாகங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

சென்னையில் நியூ ஆவடி சாலையில் ஐசிஎப் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. ரயில் பெட்டிகள் தயாரிக்க தனித்தனியாக பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது எலக்ட்ரிக்கல், பெயிண்டிங் என அனைத்து பணிகளுக்கும் ரயில் பெட்டிகள் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தயாரிக்கப்படும்.

ரயில் பெட்டிகளுக்கு தேவையான எலக்ட்ரிக்கல் உதிரிபாகம் ஆனது எண் 54 என்ற சேமிப்பு கிடங்கு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 5,000 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இந்த குடோனில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.

இங்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் இங்கிருந்து தீ கொழுந்துவிட்டு எரிந்ததை கண்டு ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்தின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் வில்லிவாக்கம், அண்ணா நகர், செம்பியம் , எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

தீயணைப்பு துறை தலைவர் சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை