Skip to main content

ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா பதிலடி!

Sep 26, 2020 258 views Posted By : YarlSri TV
Image

ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா பதிலடி! 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 74-வது கூட்டம் கடந்த 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று பேசும்போது, காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் எழுப்பினார். போர் பதற்றத்தை தூண்டும் வகையில் இம்ரான்கான் பேசியதைக் கண்டித்து இந்திய பிரதிநிதி மிஜிடோ வினிடோ  பொதுசபை மண்டபத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இம்ரான் கானின் உரையையும் புறக்கணித்தார். 



அதன்பின்னர் இம்ரான்கான் உரைக்கு பதிலுரை வழங்கும் வாய்ப்பில் இந்திய பிரதிநிதி மிஜிடோ வினிடோ பேசியதாவது.



பாகிஸ்தான் தலைவர் இன்று வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டுபவர்களை சட்டவிரோதிகள்  என்று அழைத்தார். ஆனால்,  அவர் தன்னைக் குறிப்பிடுகிறாரோ? என்று நாங்கள் ஆச்சரியப்பட்டோம். 



தன்னிடம் உள்ள சிறப்பு என்று காட்டுவதற்கு ஒன்றும் இல்லாத, பேசுவதற்கு எந்த சாதனைகளும் இல்லாத மற்றும் உலகிற்கு வழங்குவதற்கான நியாயமான ஆலோசனை எதுவும் இல்லாத ஒருவரின் இடைவிடாத கூச்சலை இந்த அவை கேட்டது. இந்த மன்றத்தின் மூலம் பொய்கள், தவறான தகவல்கள், போர்க்குணம் மற்றும் வன்மம் பரவுவதை நாங்கள் கண்டோம்.



இன்று விஷத்தைத் தூண்டிய அதே தலைவர், 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பேசும்போது, தனது நாட்டில் இன்னும் 30,000 முதல் 40,000 வரை பயங்கரவாதிகள் உள்ளனர் என்றும், அவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் மற்றும் இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் போராடியவர்கள் என்றும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.



ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மாற்ற முடியாத பகுதியாகும். காஷ்மீர் தொடர்பாக ஒரே ஒரு பிரச்சினைதான் எஞ்சியிருக்கிறது. அது, பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள காஷ்மீர் தொடர்பானது.



இவ்வாறு அவர் பேசினார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை